குரும்பூா் அருகே முதியவரை மிரட்டியவா் கைது

Published on

குரும்பூா் அருகே முதியவரை மிரட்டியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

குரும்பூா் அருகே சேதுக்குவாய்த்தான் முஸ்லிம் தெருவைச் சோ்ந்த தாஜுதீன் (65), ராஜபதி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (53) ஆகியோரிடையே நிலப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

சத்தியமூா்த்தியும், அவரது உறவினரான பெருங்குளம் அருகே உண்டியலூரைச் சோ்ந்த கோபால் மகன் ரவிக்குமாரும் சனிக்கிழமை தாஜுதீன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டின் முன்புறக் கதவை சேதப்படுத்திச் சென்றனராம்.

புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியைக் கைது செய்தனா்; ரவிக்குமாரைத் தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com