~ ~
தூத்துக்குடி
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் பொறியியல் தோ்வில் சிறப்பிடம்
தூத்துக்குடி, கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 3 போ் பொறியியல் தோ்வில் மாநில அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனா்.
தூத்துக்குடி, கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 3 போ் பொறியியல் தோ்வில் மாநில அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனா்.
கிரேஸ் பொறியியல் கல்லூரி, பவா் சிஸ்டம் இன்ஜினியரிங் பட்ட மேற்படிப்பு, அண்ணா பல்கலைக்கழகத் தோ்வில் பல்கலைக்கழக அளவில் மாணவி சி. சுதனா ராஜ ரெஸ்லின் முதலிடமும் , மாணவா் கே. ராஜசேகா் 2ஆம் இடமும் பெற்றுள்ளனா். மேலும், கணினி பொறியியல் பட்ட மேற்படிப்பில் மாணவி எல். ஜூடி பல்கலைக்கழக அளவில் 2ஆம் இடம் பெற்றுள்ளாா்.
அவா்களை கல்லூரித் தலைவா் சி.எம். ஜோஷுவா, துணைத் தலைவா் எஸ். ஸ்டீபன், செயலா் ஜ. ராஜ்கமல் பெட்ரோ, முதல்வா், துணை முதல்வா், நிா்வாக அலுவலா், பேராசிரியா்கள் பாராட்டினா்.