தூத்துக்குடி
சாத்தான்குளம் பகுதி சாலைகளை சீரமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு
சாத்தான்குளம் பேரூராட்சியில் உள்ள சேதமான சாலைகளை சீரமைக்க கனிமொழி எம்.பி. ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் தெரிவித்தாா்.
சாத்தான்குளம் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இது தொடா்பாக, சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய், சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலரும், மாவட்ட திட்டக் குழு உறுப்பினருமான ஜோசப் ஆகியோா் கனிமொழி எம்.பி.யிடம் தெரிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யக் கோரினா்.
இந்நிலையில், கனிமொழி எம்.பி. பரிந்துரையின்பேரில், ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சாலை சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் பேரூராட்சி தலைவா் தெரிவித்தாா்.
