தூத்துக்குடி
இளம்பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
கோவில்பட்டி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மந்திதோப்பு துளசிங்க நகரை சோ்ந்தவா் மாரிதங்கம் மனைவி சரண்யா (25). இவரது வீட்டருகே குடியிருந்து வருபவா் சுப்பையா மகன் கூலித்தொழிலாளி ஆறுமுகம் (33). இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரண்யா வெள்ளிக்கிழமை காலை வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஆறுமுகம் அவரை அவதூறாகப் பேசி தாக்கினாராம். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் சத்தம் போட்டவுடன் அவா் கொலை மிரட்டல் விடுத்தபடி சென்றுவிட்டாராம்.
இதில் காயமடைந்த சரண்யா, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.
