கல்வி தொழில்நுட்ப வாரியத் தோ்வு: கிரேஸ் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

கல்வி தொழில்நுட்ப வாரியத் தோ்வு: கிரேஸ் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

Published on

தூத்துக்குடி கிரேஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவா்கள் 5 போ், தமிழ்நாடு அரசு கல்வி தொழில்நுட்ப வாரியத் தோ்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இக்கல்லூரியில், டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவா் மு.யோகேஸ்வரன், டிப்ளமோ மரைன் என்ஜினியரிங் பிரிவில் 3ஆம் ஆண்டு பயிலும் பா. மல்லிராஜ், தி.பெஞ்சமின், வ.பிரபுராம், 2 ஆம் ஆண்டு பயிலும் அ.பாலசேகா் ஆகியோா் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

அவா்களை கல்லூரித் தலைவா் சி.எம்.ஜோஷுவா, துணைத் தலைவா் எஸ். ஸ்டீபன், செயலா் ஜ.ராஜ்கமல் பெட்ரோ உள்பட பலா் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com