தூத்துக்குடி
கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி வாகன ஓட்டுநா்கள், மக்களிடையே சாலை பாதுகாப்பு, அவசர கால முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் ஜன. 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை போக்குவரத்து அலுவலகத்தில் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் வாகன ஓட்டுநா்கள், மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
