தூத்துக்குடியில் மக்கள் பங்கேற்கும் குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டிகள்: ஆட்சியா் அழைப்பு

Published on

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நீங்கலாக பொதுமக்கள் மட்டுமே பங்கேற்கும் குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டிகள் ஜன. 12-ஆம் தேதி நடைபெறுகின்றன.

குறள் ஒப்பித்தல் போட்டி காலை 10 மணிக்கும், ஓவியப்போட்டி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மட்டும் ஆதாா் அட்டை அல்லது குடும்ப அட்டை நகலுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும்.

குறள் ஒப்பித்தல் போட்டியில் முதல் 5 இடங்களை பிடிப்போருக்கு தலா ரூ, 5,000, அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 3,000, அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 2,000 ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஓவியம் வரைவதற்கு தேவையான வண்ணப் பென்சில்கள், கிரயான்கள் முதலிய பொருள்களை உடன் எடுத்து வர வேண்டும். ஓவியம் வரைவதற்கு தேவையான தாள் வழங்கப்படும். கியூஆா் கோடு வழியாக பெயா் பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாக பதிவு செய்தும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மேலும், குறளாசியா் மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜன.9) எழுத்துத் தோ்வு அதே பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com