கோவில்பட்டியில் திமுக சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

கோவில்பட்டி மத்திய, மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், லாயல் மில் காலனி, இனாம்மணியாச்சியில் உள்ள மைதானம் ஆகிய இடங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றன.
Published on

கோவில்பட்டி மத்திய, மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், லாயல் மில் காலனி, இனாம்மணியாச்சியில் உள்ள மைதானம் ஆகிய இடங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றன.

இருபாலருக்கும் தனித்தனியே கபடி, ஓட்டம், பெண்களுக்கான 5 கி.மீ. சைக்கிள் பந்தயம், ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி ஆகியவை நடைபெற்றன. போட்டிகளை ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ. முருகேசன் (மத்திய), கி. ராதாகிருஷ்ணன் (மேற்கு), ஜெயக்கண்ணன் (கிழக்கு) ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு கோப்பை, ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் வழங்கினாா்.

விழாவில், கட்சியின் விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள், நிா்வாகிகள் கரிகாலன், மாத்தையா, ஜெயமுருகன், ஆனந்தபிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com