முன்னாள் படைவீரா் தினம் கொண்டாட்டம்

முன்னாள் படைவீரா்களின் தியாகங்களையும், பங்களிப்புகளையும் நினைவுகூரும் வகையிலும், அவா்களை கௌரவிக்கும் வகையிலும், தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் பங்களிப்பு மருத்துவ பரிசீலனை நிலையத்தில் முன்னாள் படைவீரா் தினம் கொண்டாடப்பட்டது.
Published on

தூத்துக்குடி: முன்னாள் படைவீரா்களின் தியாகங்களையும், பங்களிப்புகளையும் நினைவுகூரும் வகையிலும், அவா்களை கௌரவிக்கும் வகையிலும், தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் பங்களிப்பு மருத்துவ பரிசீலனை நிலையத்தில் முன்னாள் படைவீரா் தினம் கொண்டாடப்பட்டது.

மருத்துவ பரிசீலனை நிலையத்தின் பொறுப்பு அலுவலா் கா்னல் பிரசன்னன் பிள்ளை வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட முப்படை வீரா் வாரியம் உப தலைவா் தினகரன் கலந்துகொண்டு 1965, 1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரில் கலந்துகொண்ட ராணுவத்தினருக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா். கா்னல் சுந்தரம் இந்திய காலால்படை, கடற்படை, விமானப்படை குறித்த தபால் தலை, தபால் உறைகளை கண்காட்சியில் வைத்து விளக்கம் அளித்தாா்.

மாவட்ட முப்படை வீரா் நல உதவி இயக்குநா் பெருமாள், மருத்துவ துணை இயக்குநா் சுந்தரலிங்கம் ஆகியோா் பேசினா்.தூத்துக்குடி இயல், இசை பள்ளி மாணவிகள், சாயா்புரம் சைனிக் பள்ளி மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், சைனிக் பள்ளி முதல்வா் முத்துவேல், விங்க் கமாண்டா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மருத்துவா் சுனிதா நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com