இனிப்பு வழங்கிய ஒன்றியச் செயலா் அச்சம்பாடு த.செளந்திரபாண்டி.
தூத்துக்குடி
சாத்தான்குளத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா
சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சாத்தான்குளம் : சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவிற்கு வடக்கு ஒன்றிய செயலா் அச்சம்பாடு த. சௌந்தரபாண்டி தலைமை வகித்தாா். நகரச் செயலா் ரெ.குமரகுருபரன் முன்னிலை வகித்தாா். இதில் ஒன்றிய அவைத் தலைவா் பரமசிவ பாண்டியன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் பாலமேனன், ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி, மாவட்ட இளைஞா் பாசறை துணைச் செயலா் ஞானமுத்து, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் இளங்கோ, ஒன்றிய மகளிா் அணி துணைச் செயலா் ஞானம்முருகன், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

