அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை ஜன. 28க்கு ஒத்திவைப்பு

தமிழக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜன. 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Published on

தமிழக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜன. 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா், சகோதரா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சா், அவரது மனைவி, மகன் அனந்த ராமகிருஷ்ணன், அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோா் முன்னிலையாகாத நிலையில், அவரது 3 மகன்களில் அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவா் மட்டும் நேரில் முன்னிலையாகினா்.

இதையடுத்து, மாவட்ட நீதிபதி வசந்தி, வழக்கு விசாரணையை வரும் ஜன. 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தாா்.

Dinamani
www.dinamani.com