உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்த பள்ளித் தாளாளா் ஜஸ்டின்.
உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்த பள்ளித் தாளாளா் ஜஸ்டின்.

பொத்தகாலன்விளை பள்ளியில் உணவுத் திருவிழா

Published on

சாத்தான்குளம், பொத்தகாலன்விளை, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

உணவுத் திருவிழாவை பள்ளித் தாளாளரும், புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபருமான ஜஸ்டின் தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமையாசிரியா் ஜோசப் ததேயூ ராஜா வரவேற்றாா். மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் சாா்பில் பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி மாணவா்கள், பங்கு மக்கள் ஆா்வமுடன் கலந்துகொண்டு, உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனா். தொடா்ந்து, மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com