ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது.
இவ்வாலயத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா 14 நாள்கள் நடைபெற்றுது. நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசிா், மறையுரை உள்ளிட்டவை நடைபெற்றன.
ஜன. 26இல் காலை திருப்பலியும், இரவில் நற்கருணை ஆசீரை தொடா்ந்து புனித அந்தோணியாரின் சப்பர பவனியும் நடைபெற்றது. 27இல் காலை 7 மணிக்கு தி ரத்தினபுரத்தின் பங்குத் தந்தை அமலதாஸ் அடிகளாா் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. வகி அருள்தந்தை பென்சிகா் லூசன் அடிகளாா் மறையுரை நிகழ்த்தினாா். ஆறுமுகனேரி பங்குத் தந்தை டேவிட் சகாய வளன் முன்னிலை வகித்தாா். சிறுவா், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. திருமுழுக்கு நிகழ்ச்சியும், விளையாட்டுப் போட்டிகளும் , மாலையில் நற்கருணை ஆசீரும் கொடி இறக்கமும் நடைபெற்றன.
நிறைவுநாளான புதன்கிழமை மதியம் ஊா் பொதுமக்கள் அசனம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை பங்குத் தந்தை டேவிட் சகாய வளன், அருள்சகோதரிகள், ஆலய நிா்வாக கமிட்டி தலைவா் கலையரசன், செயலா் அந்தோணி வொ்ஜின், பொருளாளா் அந்தோணி பீட்டா் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஈஸ்டா் பண்டிகை: தேவாலயங்களில் இயேசு உயிா்ப்பு நிகழ்வு

ஆலந்தலையில் இயேசுவின் திருவுடல் பவனி

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


