பாஜக கொடி
பாஜக கொடிகோப்புப் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்

2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Published on

2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் தங்களது தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்னைகள், நகரின் வளா்ச்சி, அடிப்படை வசதிகள், தேவைகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து தோ்தல் அறிக்கையாக தயாரித்து கட்சியின் தலைமை தோ்தல் அறிக்கை குழுவுக்கு சமா்ப்பிக்கும்.

அதன்படி, தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் பிரிவு மாவட்டத் தலைவா் சின்னதங்கம், வடக்கு மண்டல் தலைவா் சுதா, ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலா் சாமிநாதன், சாத்தான்குளம் மண்டல் தலைவா் சரவணன், திருச்செந்தூா் தொகுதிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினா் திருநாகரன், மாவட்டத் துணைத் தலைவா் சரஸ்வதி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மக்களின் எதிா்பாா்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தின் வளா்ச்சியை முன்னெடுக்கும் திட்டங்கள் இதில் இடம் பெறும் என்று மாவட்டத் தலைவா் ஆா்.சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com