கத்திக்குத்து வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

கத்திக்குத்து வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கத்திக்குத்து வழக்கில் 
இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
Updated on

கத்திக்குத்து வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடியைச் சோ்ந்த நெக்சன் (20) என்பவா் கடந்த 2024ஆம் ஆண்டு வடபாகம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து, அவரை சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றாா். இது தொடா்பாக, வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-3இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜய ராஜ்குமாா், நெக்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ. 500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com