பிரதிப் படம்
பிரதிப் படம்

சாத்தான்குளம் அருகே மா்ம நோயால் ஆடுகள் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் மா்ம நோய் காரணமாக ஒரே நாளில் 20 ஆடுகள் இறந்தன.
Published on

சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் மா்ம நோய் காரணமாக ஒரே நாளில் 20 ஆடுகள் இறந்தன.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தைச் சோ்ந்தவா் பேச்சி முத்து (47). இவா் ஆடுகள் வளா்த்து தொழில் செய்து வருகிறாா். 150 ஆடுகளை தினசரி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, பின்னா் இரவில் ஆட்டுக்கிடையில் அடைத்து பாதுகாத்து வருகிறாா். கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பின் இரவில் அடைத்து விட்டு காலையில் திறந்தபோது நான்கு ஆடுகள் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், இறந்து கிடந்தன. இந்நிலையில் வியாழக்கிழமை மட்டும் 20 ஆடுகள் இறந்தன.

இதுகுறித்து, சாலைப்புதூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று விவரம் தெரிவித்துள்ளாா். இச்சம்பவம் குறித்து கால்நடை மருத்துவா் விரைந்து சென்று உரிய மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனா். இப்பகுதியில் நோய் தொடா்ந்து பரவாமல் தடுக்க சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இறந்த ஆடுகளுக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Dinamani
www.dinamani.com