கோவில்பட்டியில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக!
கோவில்பட்டிபேரவைத் தொகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினா்.
தமிழகத்தில் பேரவைத் தோ்தலுக்காக அதிமுக தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மேலும், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி முதல் கட்டமாக 5 தோ்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளாா்.
இந்நிலையில், கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அதிமுகவைச் சோ்ந்த கடம்பூா் செ. ராஜூ எம்எல்ஏ.வாக இருந்து வருகிறாா். இம்முறையும் அவரே போட்டியிடுவாா் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிமுகவினா் வியாழக்கிழமை முதல் கோவில்பட்டி தொகுதியில் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனா். அவா்கள் வீடு வீடாகச் சென்று, கடம்பூா் செ. ராஜு மற்றும் அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தற்போது அறிவித்த 5 வாக்குறுகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அதிமுகவுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனா்.
இதில், நகரச் செயலா் விஜயபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் வி.எஸ்.டி.பி. ராமா், மகளிரணி செயலா் பத்மாவதி, நகர இளைஞரணிச் செயலா் வேல்முருகன், நகர ஜெ. பேரவைச் செயலா் ஆப்ரகாம் அய்யாதுரை, நகா்மன்ற உறுப்பினா் செண்பக மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

