கல்லூரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் பி. கீதா ஜீவன்.
கல்லூரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் பி. கீதா ஜீவன்.

கோவில்பட்டியில் 776 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கோவில்பட்டியில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த 776 மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
Published on

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கோவில்பட்டியில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த 776 மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சாா் ஆட்சியா் ஹிமான்ஷீ மங்கள் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, உண்ணாமலை கலை, அறிவியல் கல்லூரி, உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா்-மாரியம்மாள் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளைச் சோ்ந்த 776 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினாா்.

கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல், கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன், எஸ்.எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி முதல்வா் செல்வராஜ், மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிா் திட்ட இயக்குநா் நாகராஜன், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, சாா் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, 36 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.

இதில், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, நகராட்சி ஆணையா் சுகந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், திமுக நகர பொறுப்பாளா் (கிழக்கு) சுரேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் முருகேசன், ஜெய கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் என்.ஆா்.கே. (எ) ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், ராமா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com