~
~

சாத்தான்குளம் ஒன்றியம், வட்டாட்சியா் அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Published on

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், வட்டாட்சியா் அலுவலகங்களில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமையில் அலுவலா்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் துணை வட்டாட்சியா்கள் கணேஷ்குமாா், சுவாமிநாதன், அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com