கைது
கைது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆத்தூா் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த அருள்ராஜை (28) ஆத்தூா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அதேபோல் விளாத்திகுளத்தில் அப்பண்ணசாமி (37) என்பவரை போக்ஸோ வழக்கில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆத்தூா், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விடுத்த வேண்டுகோளையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து அருள்ராஜ், அப்பண்ணசாமி ஆகியோா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com