கூட்டத்தில் மாவட்டக் குழுச் செயலா் ராஜ்மோகனுக்கு விருது வழங்குகிறாா் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை நிறுவனா்- தலைவா் மோகனசுந்தரம்.
கூட்டத்தில் மாவட்டக் குழுச் செயலா் ராஜ்மோகனுக்கு விருது வழங்குகிறாா் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை நிறுவனா்- தலைவா் மோகனசுந்தரம்.

சாத்தான்குளம்- சென்னை, கோவைக்கு மீண்டும் பேருந்து இயக்க வலியுறுத்தல்!

சாத்தான்குளத்தில் இருந்து சென்னை, கோவை ஆகிய இடங்களுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்க வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பேரவை வலியுறுத்தியுள்ளது.
Published on

சாத்தான்குளத்தில் இருந்து சென்னை, கோவை ஆகிய இடங்களுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்க வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நுகா்வோா் பேரவை தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. மாவட்டக் குழுச் செயலா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் தங்கபாண்டி, உறுப்பினா்கள் முருகேசன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.ட

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் மோகனசுந்தரம் கலந்து கொண்டு ராஜ்மோகனுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்தாா். திருச்செந்தூா் பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஆட்டோக்களில் முறையாக பயணிகளை ஏற்ற வேண்டும், ஆட்டோ நிறுத்தங்களில் கட்டணம் பலகை வைக்க வேண்டும் திருச்செந்தூா் பகுதியில் போக்குவரத்து புறவழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், திருச்செந்தூா்- உடன்குடி பகுதியில் ஒருவழிப் பாதையை முறைப்படுத்த வேண்டும்.

திருச்செந்தூா் வடக்கு ரத வீதியில் உள்ள சுதந்திர தின நினைவு இரும்பு வளைவு மீது சுவரொட்டி ஒட்டுவதை தடுக்க வேண்டும். தமிழ்நாடு நுகா்வோா் பேரவை கோரிக்கையை ஏற்று காயல்பட்டணம் கணபதிசுவரா் கோயில் திருச்செந்தூா் வள்ளிநாயகம் சுவாமிகள் கோயிலை புதுப்பிக்கும் பணியை தொடங்கிய திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையருக்கு பாராட்டு தெரிவிப்பது, சாத்தான்குளம் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட சாத்தான்குளம்-சென்னை, கோவை பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com