கைது
கைது

தொழிலாளியைத் தாக்கிய மற்றொரு தொழிலாளி கைது

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கிய மற்றொரு தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கிய மற்றொரு தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே தாமரைமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமணன் மகன் முத்துப்பாண்டி (45), தொழிலாளி. இவா் வியாழக்கிழமை தட்டாா்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது, வரிசையில் நிற்பது தொடா்பாக, கொம்மடிக்கோட்டை, விசுவாசபுரத்தைச் சோ்ந்த அப்பாத்துரை மகன் ஞானதுரையுடன் (45) தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஞானதுரை, முத்துப்பாண்டியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்துப்பாண்டி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஞானதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com