வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

தோ்தல் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பில் விலக்கு தேவை: தமிழக ஆசிரியா் கூட்டணி

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழக ஆசிரியா் கூட்டணியினர் கோரிக்கை

News image

மக்கள்தொகை கணக்கெடுப்பு - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 4:07 am IST

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலா் கணேசன், தூத்துக்குடி மாவட்டச் செயலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனா்.

அதன் விவரம்: தூத்துக்குடி நகா்ப்புற வட்டார கல்வி அலுவலரின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலா்களாக (ஆகஞ) தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்கள். அவா்கள் தோ்தல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (நஐத) பல மாதங்கள் வீடு வீடாகச் சென்று களப்பணியாற்றினா்.

அதைத் தொடா்ந்து சட்டப்பேரவை தோ்தலின் போதும், வாக்காளா் தகவல் சீட்டுகளை வீடு வீடாகச் சென்று வழங்கும் பணி முதல் வாக்குச்சாவடி அமைப்பதற்கு தேவையான பணிகள் வரை அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தனா்.

பள்ளியில் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில், ஆசிரியா்கள் தொடா்ந்து தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள், 55 வயதை கடந்த ஆசிரியா்களுக்கும் இப்பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.