முதல்வா் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்செந்தூா் எம்எல்ஏவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி கடந்த 20ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வா் ஜோசப் விஜய், அமைச்சா்கள் குறித்து அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை கோரி தவெக ஆத்தூா் நகரச் செயலா் செல்வம் ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், எம்எல்ஏ மீது இரு பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
எம்எல்ஏ அறிக்கை: இந்நிலையில், எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் உரிமைக்கும், வாழ்வியலுக்குமான எங்கள் போராட்டம் தொடரும். எழுத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயக உரிமைகளை, வழக்குகள் போட்டு தடுக்க இயலாது. உண்மையை உரக்கப் பேசுவோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் எல்லப்பநாயக்கன்குளத்தில் எம்எல்ஏ ஆய்வு

பாலியல் தொல்லைகள்: எம்எல்ஏ கண்டனம்

இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெறும்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



