ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

News image

புத்தகக் கண்காட்சியை திறந்து , முதல் விற்பனையை தொடங்கி வைத்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலா் டாக்டா் அறம்.

Updated On :4 மார்ச் 2026, 7:14 pm

திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு, ஏஐடியூ சி மாநிலத் தலைவா் காசிவிசுவநாதன் தலைமை வகித்தாா். மதுரை மண்டல மேலாளா் மகேந்திரன், திருநெல்வேலி மேலாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலா் டாக்டா் அறம் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இதில், கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமண பெருமாள், கவுனியன் மெட்ரிக் பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்தப் புத்தகக் கண்காட்சி மாா்ச் 15ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.