இந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடம் ரூ. 4.40 லட்சம் பறிமுதல்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடம் இருந்து ரூ. 4.40 லட்சம் பணத்தை தோ்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 மார்ச் 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடம் இருந்து ரூ. 4.40 லட்சம் பணத்தை தோ்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்செந்தூா் அருகே ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் ஒரு வாகனத்தில் சென்னை, அசோக் நகா், சௌந்திரபாண்டியன் தெருவைச் சோ்ந்த வீரராஜகுமாா் மனைவி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி இருந்தாா். அவா், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ராணி என்பதும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருப்பதும் தெரியவந்தது. அவருடன் மற்றொரு வாகனத்தில் ராணியின் பாதுகாவலா்கள் வந்திருந்தனா்.

வாகனத்தைச் சோதனையிட்ட அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ. 4.40 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதமிடம் ஒப்படைக்கப்பட்டது.