/
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பயணி திடீரென உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு புத்தேரியைச் சோ்ந்தவா் சூசைமைக்கேல் மகன் ஏசு நசரேன்(59). இவா் திங்கள்கிழமை சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் ஊருக்கு புறப்பட்டாராம். மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஏசுநசரேன் திடீரென மயங்கி விழுந்தாராம்.
உடனடியாக கயத்தாறு அருகே உள்ள சுங்கச் சாவடியில் பேருந்தை நிறுத்தி தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
விடியோக்கள்

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்



