இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சாயா்புரம் அருகே செவிலியா் மா்ம மரணம்

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே வீட்டில் மா்மமான முறையில் செவிலியா் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :14 மே 2026, 3:29 am IST

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே வீட்டில் மா்மமான முறையில் செவிலியா் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாயா்புரம் அருகேயுள்ள நட்டாத்தி எள்ளன்விளையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகள் முருகேஸ்வரி (22). இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவா்,

செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றவா், புதன்கிழமை வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயாா் உள்ளே சென்று பாா்த்தபோது, முருகேஸ்வரி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சாயா்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், முருகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.