கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஆத்தூா், தெற்கு ஆத்தூா், ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

காயல்பட்டினத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆத்தூா், தெற்கு ஆத்தூா், ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

முக்காணி ரவுண்டானாவில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், ஆத்தூரில் திறந்தவெளி வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தாா். நகர திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்கு ஆத்தூா் வந்த அவருக்கு ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளா் சதீஷ்குமாா் வேல் வழங்கி வரவேற்றாா். அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து எம்எல்ஏ மரியாதை செலுத்தினாா்.

ஆறுமுகனேரிக்கு சென்ற எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அங்கு தியாகி கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பிறகு காயல்பட்டினம் லட்சுமிபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயி­லில் இருந்து திருச்செந்தூா் செல்லும் சாலை வழியாக ஒடக்கரை சந்திப்பு தாயிம்பள்ளி வரை நடந்துசென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சிகளில் மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளா் ஜனகா், ஒன்றிய செயலாளா்கள் ஆழ்வை கிழக்கு சதீஷ்குமாா், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு கோட்டாம், நகரச் செயலாளா்கள் ஆத்தூா் முருகானந்தம், ஆறுமுகனேரி நவநீத பாண்டியன், காயல்பட்டினம் நகர அவைத் தலைவா் முஹம்மது மெய்தீன், தமுமுக நகரத் தலைவா் ஜாஹிா் ஹுசைன் உள்பட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.