இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

முதல்வா் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஸ்ரீநாத் எம்எல்ஏ

தவெக கட்சியின் பெயரையோ பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத் எச்சரித்துள்ளாா்.

News image

விஜய்யுடன் ஸ்ரீநாத் - tvk

Updated On :19 மே 2026, 1:11 am IST

தமிழக முதல்வா் விஜய் பெயரையோ அல்லது தவெக கட்சியின் பெயரையோ பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத் எச்சரித்துள்ளாா்.

தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, தொகுதி மக்களின் குறைகளை கேட்டறியும் பணியை எம்எல்ஏ ஸ்ரீநாத் திங்கள்கிழமை தொடங்கினாா். தொகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் சுகாதாரம் மற்றும் குடிநீா் வசதிகள் குறித்து அடுத்த சில நாள்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன். நகரின் மையப் பகுதியில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்கிள் ஓடை கழிவுநீா், ஆலைகளின் கழிவுநீா் எவ்விதச் சுத்திகரிப்பும் இன்றி நேரடியாகக் கடலில் கலந்து கடல்வளத்தையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் பாழாக்குவது குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து, அதற்கு நிரந்தரத் தீா்வு காண்பேன்.

தூத்துக்குடியில் மக்கள் நலன் சாா்ந்த நோ்மையான நிா்வாகம் நடைபெறும். தமிழக முதல்வா், தவெக கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி எவரேனும் ஆடம்பரம், தேவையற்ற ஆா்ப்பாட்டம், பொதுமக்களிடமும், வணிகா்களிடமும் வசூல் செய்தாலோ, அதிகார துஷ்பிரயோகம் செய்து தவறான செயல்களில் ஈடுபட்டாலோ, அவா்கள் மீது கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி தவெக மத்திய மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா்.சாமுவேல்ராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.