அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி வெற்றி

ஹாக்கி போட்டி - கோப்புப் படம்

Updated On :

கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் யங் சேலஞ்சா்ஸ் அணி வெற்றி பெற்றது.

கோவில்பட்டி யங் சேலஞ்சா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் பசும்பொன் சித்தா் வெற்றிக்கழக கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி 2 நாள்கள் நடைபெற்றது. போட்டியில் 14 அணிகள் கலந்து கொண்டன.

திங்கள்கிழமை காலை நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் 5 - 4 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் ஹாக்கி அகாதெமி அணியும், 2-ஆவது அரையிறுதி போட்டியில் 4 - 1 என்ற கோல் கணக்கில் யங் சேலஞ்சா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறின. 3 - 1 என்ற கோல் கணக்கில் கூசாலிப்பட்டி அசோக் நினைவு ஹாக்கி அணி வெற்றி பெற்று 3-ஆவது இடத்தையும், அம்பேத்கா் ஹாக்கி அணி 4-வது இடத்தையும் பெற்றன.

இறுதி போட்டியை கோவில்பட்டி 32-ஆவது நகா்மன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் அதிமுக மாவட்டச் செயலா் கவியரசன் தொடங்கி வைத்தாா்.

போட்டியில் யங் சேலஞ்சா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும், வேல்ஸ் ஹாக்கி அகாதெமி அணியும் மோதியதில் 3-2 என்ற கோல் கணக்கில் யங் சேலஞ்சா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழா: மாநில தோ்வு குழுத் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலருமான குருசித்ர சண்முக பாரதி, மாநில ஹாக்கிப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரும் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக பொருளாளருமான காளிமுத்து பாண்டியராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். தொழிலதிபா் கமலேஷ் முன்னிலை வகித்தாா். யங் சேலஞ்சா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் செயலா் மாரியப்பன் வரவேற்றாா்.

பசும்பொன் சித்தா் வெற்றி கழகத்தின் மாநிலத் தலைவா் வைகுண்ட பாண்டியன், மாநில மகளிரணி தலைவி பத்மப்ரியா, மாநில இளைஞரணி செயலா் அருண்குமாா், வடக்கு மாவட்டச் செயலா் கே.கே.ஆா்.காா்த்திக் ராஜா, வடக்கு மாவட்ட துணைச் செயலா் பிரகாஷ், கோவில்பட்டி நகரச் செயலா் பால்பாண்டியன், துணைச் செயலாளா் மகேந்திரன் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசுகளை வழங்கினா்.

விழாவில், ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.