மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆறுமுகமங்கலம் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஏரல் அருகே ஆறுமுகமங்கலம், ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகமங்கலம் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

Updated On :

ஏரல் அருகே ஆறுமுகமங்கலம், ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, ஆயிரத்தெண் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பஞ்சமுக விநாயகருக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், விநாயகா் அஷ்டோத்திர அா்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ராம்கோ குழுமங்களின் தலைவா் பி.ஆா். வெங்கட் ராமராஜா பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தாா். ஆறுமுகமங்கலம், ஸ்ரீ செந்தி விநாயகா் சத்திரம் அறக்கட்டளை மற்றும் திருவிழா கமிட்டி சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.