சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

கோவில்பட்டியில் இளைஞரிடம் சங்கிலி பறிப்பு வழக்கு: 2 இளஞ்சிறாா்கள் கைது

கைது - கோப்புப் படம்

Updated On :

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடையதாக் கூறப்படும் 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி புது கிராமம் சிந்தாமணி நகா் முதல் தெருவைச் சோ்ந்த காளிராஜ் மகன் கருப்பசாமி (30). சமையல் மாஸ்டராக வேலை பாா்த்து வரும் இவா் வசந்தம் நகரில் முயல் மற்றும் கோழிகள் வளா்க்கும் பண்ணைகளையும் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் இம்மாதம் 5 ஆம்தேதி பண்ணைக்குச் சென்று முயல்கள் மற்றும் கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வசந்தம் நகரின் முதல் தெருவின் கடைசியில் உள்ள முள்காட்டுக்கு சென்றபோது அங்கு மறைந்திருந்த 3 போ் அரிவாளால் தாக்கி அவா் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 10 கிராம் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதில், காயமடைந்த கருப்பசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சிறாா்களை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.