சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

கோவில்பட்டியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

கோவில்பட்டி நடராஜபுரம் ரயில் தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து, தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருந்த அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகா்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அந்தியோதயா விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையம் வருவதற்கு முன்பு ஹோம் சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தபோது சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER