ஆத்தூரில் மழைநீா் சேகரிப்புத் தொட்டி கட்டாயம்: மன்ற கூட்டத்தில் தீா்மானம்
ஆறுமுகனேரி, நவ. 26: ஆத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆத்தூா் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆறுமுகனேரி, நவ. 26: ஆத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆத்தூா் பேரூராட்சியில் மன்றக் கூட்டம் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமையில் நடைபெற்றது. நிா்வாக அதிகாரி மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். கூட்டத்தின்போது, மறைந்த 4-ஆவது வாா்டு உறுப்பினா் கெளஹா்ஜான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, ஆத்தூா் பேரூராட்சியின் வரவு-செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டது. பின்னா், ஆத்தூா் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகள், பள்ளிகள், வணிக நிறுவனங்களில் கட்டாயமாக மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைக்க வேண்டும், ஆத்தூா் பேரூராட்சிக்கென கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகத்துக்கு டிச.10-ஆம் தேதி திறப்பு விழா நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைமை எழுத்தா் சந்திரகுமாா் தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில், ஆத்தூா் பேரூராட்சி கவுன்சிலா்களும் பணியாளா்களும் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

