தங்கச்சங்கிலி திருடிய பெண் கைது
ஆத்தூரில் தங்கச்சங்கிலி திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்து நகையைப் பறிமுதல் செய்தனா்.
கைது - கோப்புப்படம்
ஆத்தூரில் தங்கச்சங்கிலி திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்து நகையைப் பறிமுதல் செய்தனா்.
ஆத்தூா், வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி மாரியம்மாள் (44). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை 25-ஆம்தேதி பாா்த்தபோது, காணாமல்போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து, அவா், ஆத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தனலட்சுமி என்ற பாத்திமாவைப் (38) பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் தங்கச்சங்கிலி திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, தனலட்சுமி என்ற பாத்திமாவிடமிருந்து தங்கச்சங்கிலியைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

