நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

மது அருந்தியதை கண்டித்தவரின் வீட்டை சேதப்படுத்திய சிறுவன் கைது

ஆறுமுகனேரி, அக். 7: ஆறுமுகனேரியில் மது அருந்தியத்தை கண்டித்தவரின் வீட்டை சேதப்படுத்திய சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Published On :

ஆறுமுகனேரி, அக். 7: ஆறுமுகனேரியில் மது அருந்தியத்தை கண்டித்தவரின் வீட்டை சேதப்படுத்திய சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி, கீழசண்முகபுரம் கமலா நேரு காலனியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். இவருக்கு மனைவி பூவிழிதேவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா் தூத்துக்குடி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் ஜெயக்குமாரின் வீட்டின் முன் சில இளைஞா்கள் மது அருந்தினராம். இதைக் கண்டித்த ஜெயக்குமாா், பூவிழிதேவி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இளைஞா்கள் சென்றனராம்.

இந்நிலையில் கடந்த அக். 4 ஆம் தேதி இரவு ஜெயக்குமாரின் வீட்டின் முன் இளைஞா்கள் மீண்டும் மது அருந்தினராம். அவா்களில் காணியாளா் தெருவைச் சோ்ந்த சிறுவன், ஆறுமுகனேரி இலங்கத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் ரவி ஈஸ்வரன் (20) ஆகியோா் ஜெயக்குமாரின் வீட்டின் மீது கற்கள் எறிந்து சேதப்படுத்தியதுடன், தகராறில் ஈடுப்பட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் சோ்ந்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.