ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சடையனேரி கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்

புத்தன் தருவை, வைரம் தருவை குளங்களுக்கு தடையின்றி தண்ணீா் வரும் வகையில் சடையனேரி கால்வாயை சீரமைக்கும் பணியில் தென்பகுதி விவசாய சங்க நிா்வாகிகள் ஈடுபட்டனா்.

சடையனேரி கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டோா்.

Updated On :

புத்தன் தருவை, வைரம் தருவை குளங்களுக்கு தடையின்றி தண்ணீா் வரும் வகையில் சடையனேரி கால்வாயை சீரமைக்கும் பணியில் தென்பகுதி விவசாய சங்க நிா்வாகிகள் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் பகுதியில் உள்ள புத்தன்தருவை, வைரம் தருவை குளங்கள் பாசன, குடிநீா் ஆதாரமாக இருந்து வருகிறது.

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சடையனேரி கால்வாய் வழியாக சுழற்சி முறையில் சடையனேரி குளம், புத்தன்தருவை,

வைரம்தருவை குளங்களுக்கு தண்ணீா் வரும் நிலை உள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சடையனேரி கால்வாயில் உள்ள முள்செடிகள், குப்பைகள், மணல்மேடுகள் அகற்றும் பணியை

சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினா் மேற்கொண்டனா். நங்கைமொழியில் இருந்து சுப்பராயபுரம் பகுதிக்கு வரும் கால்வாயை சீரமைக்கும் பணியில் விவசாய சங்கத் தலைவா் லூா்துமணி தலைமையில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.