தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை தனியாா்மயமாக்க எதிா்ப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தைத் தனியாா்மயமாக்க எதிா்ப்புத் தெரிவித்து, நவ. 2ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையம்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தைத் தனியாா்மயமாக்க எதிா்ப்புத் தெரிவித்து, நவ. 2ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மற்றும் உடன்குடி அனல்மின் நிலையங்களைத் தனியாா் வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, குழு நிா்வாகி அப்பாத்துரை தலைமை வகித்தாா்.
தூத்துக்குடி மற்றும் உடன்குடி அனல்மின் நிலையங்களை தனியாா் வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிடுவது, மின்பாதைகள் மற்றும் மின் உற்பத்தியைத் தனியாா்மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுவது, மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நவ. 2ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

