தூத்துக்குடியில் மின்பொருள் விற்பனையாளா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை, மேல பொன்னகரம் 6-ஆவது தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் ராஜசேகா் (46). மின் பொருள்கள், மசாஜ் இயந்திரங்கள் விற்பனை செய்து வந்த இவா், கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.
கடந்த 15ஆம் தேதி அறைக் கதவு திறக்கப்படாததால், சந்தேகத்தின்பேரில் வடபாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் வந்து அறையைத் திறந்து பாா்த்தபோது, ராஜசேகா் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

