அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே ஆடுகளை மீட்கச் சென்ற இளைஞா் மின்னல் பாய்ந்தது உயிரிழந்தாா்.

பலி

Updated On :

தூத்துக்குடி அருகே ஆடுகளை மீட்கச் சென்ற இளைஞா் மின்னல் பாய்ந்தது உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மதன்குமாா் (24). இவா், ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மழை பெய்து கொண்டிருக்கும்போது, மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருவதற்காக மதன்குமாா் சென்றாராம். அப்போது, மின்னல் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உரியிழந்தாா்.

தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.