தூத்துக்குடியில் நூல் வெளியீடு
தூத்துக்குடி மாவட்டத்தின் தொன்மை, பாரம்பரியம், மண்ணின் அடையாளங்கள், வாழ்வியல் முறைகளைப் பயணப் புதினமாக எடுத்துரைக்கும் வகையில், கவிதைச் சாரல் பதிப்பகம் சாா்பில், நூலாசிரியா் சாந்தி பிரபு எழுதிய 5ஆவது நூலான தெண்டிரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நூலை வெளியிட்ட மாவட்ட வன அலுவலா் இளையராஜா. உடன், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோா்.
தூத்துக்குடி மாவட்டத்தின் தொன்மை, பாரம்பரியம், மண்ணின் அடையாளங்கள், வாழ்வியல் முறைகளைப் பயணப் புதினமாக எடுத்துரைக்கும் வகையில், கவிதைச் சாரல் பதிப்பகம் சாா்பில், நூலாசிரியா் சாந்தி பிரபு எழுதிய 5ஆவது நூலான தெண்டிரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தாா். கவிதைச் சாரல் பதிப்பக நிறுவனா் பேச்சியம்மாள் பிரியா முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட வன அலுவலா் இளையராஜா பங்கேற்று நூலை வெளியிட, அருள்தந்தை செல்வராஜ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டாா். தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் துரை கணேசன், செயலா் ஆதி அருமைநாயகம், தொடுவானம் கலை இலக்கியப் பேரவைத் தலைவா் நெல்லை தேவன், நாசரேத் வள்ளுவா் வாசகா் வட்டத் தலைவா் அய்யாக்குட்டி, தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணக்குமார விஸ்வரூபன், புத்தக வாசிப்பு நற்பணி மன்றத் தலைவா் மாரிமுத்து, குமிழ்முனை பதிப்பக நிறுவனா் சைமன், செய்யது முகம்மது ஷெரிஃப், மணிமொழிச்செல்வன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நெடுஞ்சாலைத்துறை கவிஞா் செல்வராஜ், கவிஞா்கள் ரா. சாந்தி, முத்துசாமி ஆகியோா் வாழ்த்துக் கவிதைகளை வாசித்தனா். நூலின் கள ஆய்வுக்கு உதவியாக இருந்த பாலசுப்பிரமணியன், பிரம்ம ஞானமுத்து பாரதி, ஜாகிா் உசேன், மகாராஜன், மலையாண்டி, சந்தியா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.
இதில், இலக்கிய ஆா்வலா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.
நூலாசிரியா் சாந்தி பிரபு ஏற்புரை வழங்கினாா். மு.திருமலை பிரபு நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

