வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

தூத்துக்குடி அருகே காா் மோதி ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலசமுத்திரம் அருகே காா் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Updated On :

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலசமுத்திரம் அருகே காா் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

புதியம்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாலசமுத்திரம் மேம்பாலம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்து சென்ற நபா் மீது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத காா் மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

புதியம்புத்தூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப் பதிந்து, உயிரிழந்தவா் யாா் என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.