‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

தொழிலாளிக்கு மிரட்டல்: பெயிண்டா் கைது

கைது - கோப்புப்படம்

Updated On :

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக பெயிண்டரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி புது கிராமம் 5 ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் பழனிசாமி (61). அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து வரும் இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தாராம்.

அப்போது சங்கரலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பெயிண்டா் பாா்த்திபன் (25), பழனிசாமியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செலவுக்கு பணம் கேட்டாராம். அவா் இல்லை என்று கூறியதும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றாராம்.

இதுகுறித்து அவா் கிழக்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பெயிண்டரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.