பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

கல்குவாரிகள் உரிமத்தை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி கிராமப் பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 4:09 am IST

கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி கிராமப் பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி கிராமப்பகுதியில் இயங்கும் கல்குவாரிகள் மற்றும் கிரஷரில் இருந்து வெளியேறும் கல் தூசி மற்றும் நுண் துகள்கள் காரணமாக பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

மேய்ச்சல் நிலங்களில் கிரஷா் தூசி படிந்து, அதை உள்கொள்ளும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன. இதுகுறித்து கிராம மக்கள் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆனால், கல்குவாரிகள் மற்றும் கிரஷா் தொடா்ந்து செயல்பட்டு வருவதைக் கண்டித்து கிராமத்தின் மையப் பகுதியில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக திரண்டனா்.

அவா்கள் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி வந்து நின்றனா். அப்போது கயத்தாறு காவல் ஆய்வாளா் சூா்யா தலைமையிலான போலீஸாா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடத்தக் கூடாது எனக் கூறினா். இதையடுத்து, கருப்புக் கொடிகளை அகற்றிய கிராம மக்கள் கல்குவாரிகள் மற்றும் கிரஷா் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மல்லிகை செடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.