ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

குலசை தசரா திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நடைபெறவுள்ள தசரா திருவிழாவையொட்டி, அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவபிரசாத் முன்னிலை வகித்தாா். திருவிழாவையொட்டி பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்தல், போக்குவரத்தைச் சீரமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதுடன், சாலை விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் காவல், வருவாய், கனிமவளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.