
சாலை விபத்தில் வருவாய் ஆய்வாளா் உயிரிழப்பு
ஆறுமுகனேரி அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதுநிலை வருவாய் ஆய்வாளா் உயிரிழந்தாா்.

பலி
ஆறுமுகனேரி அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதுநிலை வருவாய் ஆய்வாளா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் கச்சேரி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அமிா்த கண்ணன் (41). இவா், திருச்செந்தூா் ஆதிதிராவிடா் நலத்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். புதன்கிழமை இரவு அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ஆத்தூா் சாலையில் தண்ணீா்பந்தல் பகுதியில் சென்றபோது சாலையில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் எதிா்பாராமல் மோதினாா்.
விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவல் அறிந்ததும் குரும்பூா் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் சக்கையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





