மன்னார்குடி, ஜூலை 19: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது தாமதம் ஆவதால், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, கோட்டூர் வேளாண் கோட்டங்களில் சுமார் 29 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, இதுபோன்ற பல்வேறு காரணங்களால் விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி, மன்னார்குடி பகுதியில் 13 ஆயிரம் ஏக்கரில் குறுவையும், 29 ஆயிரம் ஏக்கரில் சம்பாவும், 10 ஆயிரம் ஏக்கரில் தாளடியும் சாகுபடி செய்யப்படுகிறது. கோட்டூர் பகுதியில் 17 ஆயிரம் ஏக்கரில் குறுவையும், 35 ஆயிரம் ஏக்கரில் சம்பாவும், 12 ஆயிரம் ஏக்கரில் தாளடியும் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், மேட்டூர் தண்ணீர் திறப்பு தாமதத்தால், கோட்டூர் கோட்டத்தில் 2500 ஏக்கரிலும், மன்னார்குடி கோட்டத்தில் மேற்குப் பகுதியில் மட்டும் 3000 ஏக்கரிலும் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, 60 நாள்கள் குறுகிய காலப் பயிராக ஆடிப்பட்ட உளுந்து பயிரிடும் முயற்சியிலும் சில குறிப்பிட்ட பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீர் திறப்பு தாமதத்தால் குறுவை சாகுபடியை விடுத்து, சம்பா, தாளடி சாகுபடிக்கு மாற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைவது; அறிவிக்கப்படாத மின் வெட்டு; மும்முனை மின் விநியோகச் சுழற்சியில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் ஆழ்குழாய்க் கிணறு மூலம் விவசாய பணிகள் மேற்கொள்வதையும் விவசாயிகள் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, காலம் தவறி பெய்யும் மழையால் சாகுபடியில் பாதிப்பு, பயிர்க் கடன், காப்பீடு, இழப்பீடு வழங்குவதில் வங்கிகள் காட்டும் மெத்தனம், தரமான விதை, உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடு, விவசாய உற்பத்தி பொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலையை அரசு நிர்ணயம் செய்யாதது, வேலை தேடி டெல்டா பகுதி தொழிலாளர்கள் தொழில் நகரங்களுக்கு சென்றுவிட்டதால், விவசாய வேலைக்கு ஆள்கள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது அல்லது மாற்றம் செய்பவர்களுக்கு துணைப் போவது என்று விவசாயிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
விளைநிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படுவதைத் தடுக்க கேரளத்தில் உள்ளதுபோலச் சட்டம் கொண்டு வர ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில், சட்டத்தை கொண்டு வந்து அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத விஷயம். ஏனெனில், அதிலுள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி,அவர்கள் தப்பித்துவிடுவர்.
எனவே, குடிநீர்த் தட்டுப்பாடு, விலைவாசி பிரச்னை ஆகியவற்றுக்கு பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள், விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையான காவிரி பிரச்னையை அவ்வப்போது மட்டும் கையிலெடுப்பதும், பின்னர் அதை விட்டுவிடுவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
அதைவிடுத்து, அரசியல் பார்வையிலிருந்து விலகி வந்து, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண ஆட்சியாளர்களும், பிற அரசியல்கட்சியினரும் முனைப்பு காட்ட வேண்டும். இல்லையென்றால், அடுத்த தலைமுறையினர் விவசாய நிலங்களைப் பார்க்க கண்காட்சி அரங்கத்திற்கு செல்லும் நிலை ஏற்படலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
சித்திரை மாதப் பலன்கள் - ரிஷபம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

