சீர்காழியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி செயல்பாட்டிற்கு வருமா?

சீர்காழி, நவ. 21: நாகை மாவட்டம், சீர்காழி நகராட்சி பகுதியில் மக்களவை உறுப்பினரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் கட்டப்பட்டு, செயல்படாமல் உள்ள மினி பவர் பம்பு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

சீர்காழி, நவ. 21: நாகை மாவட்டம், சீர்காழி நகராட்சி பகுதியில் மக்களவை உறுப்பினரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் கட்டப்பட்டு, செயல்படாமல் உள்ள மினி பவர் பம்பு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியன பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  சீர்காழி அருகே உள்ள சித்தமல்லி கொள்ளிட ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் நேரடியாக குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது சீர்காழி நகராட்சி நிர்வாகம். கொள்ளிட ஆற்றின் நடுவில் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மோட்டார் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது.

   இதுபோன்று குடிநீர்ப் பிரச்னை அடிக்கடி ஏற்பட்டதால், கடந்த 2008-ம் ஆண்டு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மணிசங்கர் அய்யரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் சுமார் ரூ. 10 லட்சத்தில் தென்பாதி, கீழமடவிளாகம், ஈசானிய தெரு உள்ளிட்ட 5 இடங்களில் மினி பவர்

பம்பு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டி திறக்கப்பட்டன.

   இவை சுமார் 8 மாதங்களே செயல்பட்டன. கொள்ளிட குடிநீர் மின் மோட்டார் பழுது ஏற்பட்ட நாள்களில் இந்த குடிநீர் தொட்டியின் மூலம் பொதுமக்களின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டது.

அதன்பின்னர், நகராட்சி நிர்வாகம் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

   கடந்த 2 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பூட்டிய நிலையில் கிடக்கின்றன.

சீர்காழி பொதுமக்கள் இன்றளவும் குடிநீர் பிரச்னையில் உள்ளனர்.

இதுதொடர்பாக நகர மக்கள் பல முறை நகர்மன்றத் தலைவர் சாந்தினியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

   எனவே, மாவட்ட நிர்வாகம் சீர்காழி மக்களின் குடிநீர்ப் பிரச்னையை போக்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com