கும்பகோணம், நவ. 25: கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களின் நேரம் குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டது.
குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், ரயில் பயணிகள் நலன் கருதி, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களின் நேரம் குறித்த அட்டவணையை ரயில் உபயோகிப்பாளர்களுக்கு இலவசமாக அளிக்கும் விதமாக கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது.
கால அட்டவணையை குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் அடியான் செட்டியார் வெளியிட, குடந்தை மருந்து வணிகர் சங்கத் தலைவர் சிவராம கிருஷ்ணன், குடிநீர் மற்றும் குளிர்பானம் விற்பனையாளர்கள் நலச்சங்கத் தலைவர் சந்திரபிரபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பு செயலர் சத்தியநாராயணன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.